புதிய இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சேர்ப்பு! பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத குழுக்கள் அதிர்ச்சி.!

புதிய இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சேர்ப்பு! பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத குழுக்கள் அதிர்ச்சி.!

Update: 2019-11-04 06:21 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.


இந்நிலையில், முன்னர் 14 மாவட்டங்களாக இருந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது 28 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைகளை விளக்கும் வகையில் புதிய வரைபடம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



இந்த புதிய வரைப்படத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் முசாராபாத் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானிலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு கோஷ்டிகள் மற்றும் தீவிரவாத குழுக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தான் இராணுவ கண்காணிப்பில் உள்ளன. இந்தியாவுக்குள் நுழையவும், தாக்குதல் தொடுக்கவும் பயங்கரவாதிகள் இந்த பகுதிகளையே அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News