காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? பிரதமர் மோடிக்கு ரசிகர்களாகும் மூத்த தலைவர்கள்! புதுவரவு மணிசங்கர் ஐயர்!!

காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா? பிரதமர் மோடிக்கு ரசிகர்களாகும் மூத்த தலைவர்கள்! புதுவரவு மணிசங்கர் ஐயர்!!

Update: 2019-08-29 13:06 GMT


கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் திடீரென பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி ஆற்றிய பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. 


மக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார். இவற்றை நாம் புரிந்து கொள்ளாதவரை அவரை நாம் எதிர்கொள்ள முடியவே முடியாது. 





மேலும் சதா அவரை ஏதோ பிசாசாக பாவித்து விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது. இத்தகைய அணுகுமுறையில் நீங்கள் அவரை எதிர்கொள்ள முடியாது.


இவ்வாறு அவர் மோடிக்கு ஆதரவாகப் பேசினார்.


ஜெய்ராம் ரமேசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார்.


இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடியை பூதாகரமாக பாவித்துப் பேசுவது மட்டும் போதாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரே மாதிராயான எதிர்ப்புப் பிரச்சாரம் அவருக்கு சாதகமாகவே முடியும். ஒருவரின் செயல்பாடுகள் நல்லவை, தீயவை, சார்பானவையாக இருக்கலாம். ஆனால், அந்த செயல்பாடுகளை பிரச்சினைகளின் அடிப்படையில் சீர்தூக்க வேண்டுமே தவிர அவற்றை தனிநபர் சார்ந்து மதிப்பிடப்படக் கூடாது. உஜ்வாலா திட்டம், மோடியின் நல்ல திட்டம்தான்” என்று ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.


அபிஷேக் சிங்வியைத் தொடரந்து மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான சசிதரூர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை பாராட்டினார். மேலும் “மோடி ஆட்சி மோசமானதல்ல. அதனை அங்கீகரிக்காமல், பூதாகரமாக்குவது கட்சியின் எதிர்காலத்துக்கு உதவாது” என்றார்.


அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டது, காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  


இந்த நிலையில் இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர். “டீ விற்றவர் எல்லாம் பிரதமர் ஆக முடியாது” என்றெல்லாம் வர்ணித்த மணி சங்கர் ஐயர், இப்போது மோடியின் ஆதரவாளர் பட்டியலில் இணைந்துள்ளார். 


இது பற்றி அவர் கூறும்போது, “எப்போதும் மோடியை எதிர்ப்பது காங்கிரசை வளர்க்க உதவாது. மோடி ஆட்சி நடத்தும் விதம் முழுமையாக எதி்ர்க்கக்கூடியது அல்ல” என்றார்.


Similar News