சிறைச்சாலை விதிகளை மீறிய சசிகலா வெளியே வருவது கஷ்டம் தான் ? பரபரப்பு விசாரணை அறிக்கை.!

சிறைச்சாலை விதிகளை மீறிய சசிகலா வெளியே வருவது கஷ்டம் தான் ? பரபரப்பு விசாரணை அறிக்கை.!

Update: 2019-10-09 09:46 GMT

பெங்களூரு அக்ரஹார சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா இளவரசி ஆகியோர் உள்ளனர். அங்கு காங்கிரஸ் ஆட்சி இருந்த சமயத்தில் டி.ஜி.பி. சத்யநாராயணராவ் இவர் சிறையில் இருக்கும் சசிகலாவை சிறப்பான முறையில் கவனித்து வந்துள்ளார்.


சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா அக்ரஹார சிறையில் சோதனையிட்டார் அப்போது சசிகலா ஹாயாக வெளிய ஷாப்பிங் செய்து விட்டு வந்த வீடியோ சிக்கியது. இது குறித்து விசாரித்த ரூபா சசிகளைவிடமிருந்து டி.ஜி.பி.சத்யநாராயணராவ் 2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அதற்காக சிறை விதிமுறைகளை மீறி டி.ஜி.பி.சத்யநாராயணராவ் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.


இது குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்தது . இந்த உயர் மட்ட குழு விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. இந்த அரிக்கியில் சசிகளவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மை என்று கூறியுள்ளது. இதில் சசிகலாவிற்காக 5 செல்களில் இருந்தவர்களை காலி செய்து அவருக்கு மிகப்பெரிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது மட்டுமில்லமால் சிறையை விட்டு வெளியே சென்றதும் உண்மைதான் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவர் என செய்திகள் பரவியது அந்த ஆனால் தற்போது அவர் விடுதலை ஆவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகி உள்ளது.


“சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும் 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறையில் சசிகலாவுக்காக சமையல் செய்ப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையில் இருந்து விதிகளைமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மைதான்” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Similar News