டெல்லியில் மாபெரும் குண்டு வெடிப்பு சம்பவம் முறியடிப்பு - ISIS இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை கொத்தோடு தூக்கிய காவல்துறை!

டெல்லியில் மாபெரும் குண்டு வெடிப்பு சம்பவம் முறியடிப்பு - ISIS இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளை கொத்தோடு தூக்கிய காவல்துறை!

Update: 2019-11-25 14:00 GMT

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மூன்று நபர்களை டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டுள்ள முகாதாஸ் இஸ்லாம், ரஞ்ஜித் அலி மற்றும் லெவிஸ் ஜமால் ஜமீல் ஆகிய மூன்று பேரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


அவர்கள் மூவரும் ISIS இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குஷ்வாகா கூறுகையில் , "கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடம் இருந்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இதன் மூலம் டெல்லியில் நடக்க இருந்த குண்டுவெடிப்பு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar News