படித்த முட்டாள்கள் நிரம்பிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள்!! உலகை அச்சுறுத்தி அழிந்துபோன பின்லேடன், பாக்தாதி, அல்-ஜவாஹிரியின் கல்வி வரலாறு.!
படித்த முட்டாள்கள் நிரம்பிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள்!! உலகை அச்சுறுத்தி அழிந்துபோன பின்லேடன், பாக்தாதி, அல்-ஜவாஹிரியின் கல்வி வரலாறு.!
மதத்தின் பெயரால் உலகை அச்சுறுத்தி, பயங்கரவாத செயல்கள் மூலம் உலகை அமைதி இழக்க செய்து, உலகத்தை இஸ்லாமிய மயமாகுவோம் என்று சவால் விட்டு இலட்சக்கணக்கான அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை, மதம் என்ற பெயரில் பழமையின் பிடியில் சிக்கியுள்ள இஸ்லாமிய வெறியர்களை தங்கள் பக்கம் ஈர்த்து தங்கள் சொந்த சகோதரர்களையே கொடூரமாகக் கொன்று உலகம் முழுக்க கிளைகளை பரப்பி உலக அமைதிக்கு சவால் விட்டு நாசமாகப் போனவர்கள் 3 இஸ்லாமிய பயங்கரவாத தலைவர்கள்.
இவர்கள்தான் பாக்தாதி, ஒசாமா-பின்_லேடன் மற்றும் அல்-ஜவாஹிரி ஆகிய 3 பயங்கரவாத இயக்க தலைவர்கள்.
இவர்கள் கடைபிடித்த மூர்கத்தனமான கொள்கைகள் பேரில் உலகமே இவர்களை பழமைவாதிகள் என்றும், உலகுக்கு தீங்கு விளைவிக்க வந்த கொடூர இரத்த காட்டேரிகள் என்றே கருதினர். ஆனால் இந்த 3 பேரும் உண்மையில் உயர்கல்வி பயின்றவர்கள். பாக்தாதி இஸ்லாமிய மதம் தொடர்பான கல்வியில் பி.எச்.டி.பயின்றவர். ஒசாமா-பின்_லேடன் மிகப்பெரிய பல்கலைகழகத்தில் கட்டிடப் பொறியியல் பட்டம் பெற்றவர். பின்லேடனின் வழயில் பயங்கரவாதத்தை வழி நடத்திய அல்-ஜவாஹிரி ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
தங்கள் கல்வி அறிவை கல்வி அறிவு குறைவான இஸ்லாமிய சமுதாய மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் இஸ்லாமியர்களிடம் இருக்கும் அறியாமை, தீவிர மத வெறி, கல்வி அறிவு இல்லாமை இவற்றை பயன்படுத்தி மதம் என்ற பெயரிலேயே பயங்கரவாத இயக்கங்களை தொடங்கி தங்கள் சுயநல வாழ்வுக்காக ஒரு சமுதாயத்தின் பெயரையும், அல்லாவின் புகழையும் கெடுத்து குட்டிச்சுவராக்கியது இந்த படித்த மேதாவிகள்தான்.
இதிலிருந்து இவர்களின் மத தீவிரவாதம் கல்விக்கும் அப்பாற்பட்ட ஓன்று எனவும், இவர்கள் பெற்ற கல்வி மானிடர்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை, மாறாக மனித இனத்துக்கும், அவர்களின் இனத்துக்குமே நாசம் விளைவித்தனர். குறிப்பாக இவர்களின் செயல்களால் மிகப்பெரிய அளவில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.