“முன் அனுமதியின்றி காஷ்மீர் சென்றது தவறு” - ராகுல் காந்திக்கு மாயவதி அறிவுரை!!
“முன் அனுமதியின்றி காஷ்மீர் சென்றது தவறு” - ராகுல் காந்திக்கு மாயவதி அறிவுரை!!
நரேந்திர மோடி அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ஆம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.
அங்கு, பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டு வருகிறது.
காஷ்மீருக்கு தனி அந்தந்ஸ்த வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு உலக நாடுகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரை அனைவரும் ஆதரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கையை ஒவ்வொரு இந்தியனும் பாராட்டி, கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், பாகிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள், காங்கிரஸ்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக டெல்லியில் தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்த போராட்டத்தில் 150 பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்திற்கு பாகிஸ்தான் ரோடியோ செய்தி வெளியிட்டு மகிழ்ந்தது.
திமுகவின் போராட்டத்தில் கலந்து கொண்டு அசிங்கப்பட்ட தேச துரோகிகள், ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் செல்ல முடிவு செய்தனர்.