புதிதாக கட்டும் வீட்டுக்கு ரூ.73 லட்சத்தில் கதவு, ஜன்னல் : அரசு பணத்தை வாரி இறைக்கிறாரா ஜெகன்மோகன் ரெட்டி.? சந்திரபாபு நாயுடு உடைத்த இரகசியம்!
புதிதாக கட்டும் வீட்டுக்கு ரூ.73 லட்சத்தில் கதவு, ஜன்னல் : அரசு பணத்தை வாரி இறைக்கிறாரா ஜெகன்மோகன் ரெட்டி.? சந்திரபாபு நாயுடு உடைத்த இரகசியம்!
தான் புதிதாக கட்டும் வீட்டுக்கு அரசு பணத்தில் இருந்து 73 லட்சம் ரூபாய்க்கு ஜன்னல், கதவுகளை வாங்குகிறார் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைத்தது முதலே சீர்திருத்தம் என்ற பெயரில், அரசு திட்டங்களுக்கு அவரின் தந்தை பெயரை முன்னிறுத்தி வருகிறார் என்று, எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சுமத்தி வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஜெகன்மோகன் ரெட்டி தான் கட்டிவரும் வீட்டுக்கு ரூ.73 லட்சத்தில் ஜன்னல், கதவுகளை அமைக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மக்களின் பணத்தை ஜெகன்மோகன் தாராளமாகச் செலவழிக்கிறார். கடந்த 5 மாதங்களாக ஆந்திர அரசு நிர்வாகம் தவறாக வழிநடத்தப்பட்டு, நிதிச்சிக்கலில் சிக்கி இருக்கிறது என்று கூறியுள்ளார்.