ஜம்மு- காஷ்மீரில் களைகட்டிய நவராத்திரி விழா!! ஸ்ரீ துர்கா தேவியை வரவேற்று சிறப்பான நிகழ்ச்சிகள்!!

ஜம்மு- காஷ்மீரில் களைகட்டிய நவராத்திரி விழா!! ஸ்ரீ துர்கா தேவியை வரவேற்று சிறப்பான நிகழ்ச்சிகள்!!

Update: 2019-10-02 10:54 GMT


எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் நவராத்திரி விழாவை சீரும் சிறப்புமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போதுள்ள இந்த மகிழ்ச்சி நீடிக்கவும், மீண்டும் தங்களை தொல்லைகள் அண்டாதிருக்கவும் மக்கள் ஸ்ரீதுர்கா தேவியை வேண்டி நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.


இந்த விழாவை ஜம்முவிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கத்ராவில் நவராத்திரி விழாவின் முதல் நாளையொட்டி பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடனமணிகள் ஒன்பது இரவு வழிபாட்டு நிகழ்ச்சியான நவராத்திரி விழாவை வரவேற்கும் வகையில் நடனமாடினர். – படம் மற்றும் செய்தி: இபிஏ


Similar News