நிலவையும் கூட விட்டு வைக்காத காங்கிரஸ் குடும்பம் - சந்திராயன்-1 திட்டத்தில் மூடி மறைக்கப்பட்ட சில விடயங்கள்!

நிலவையும் கூட விட்டு வைக்காத காங்கிரஸ் குடும்பம் - சந்திராயன்-1 திட்டத்தில் மூடி மறைக்கப்பட்ட சில விடயங்கள்!

Update: 2019-08-12 07:20 GMT

பிஜேபி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசங்கள் என்ன? என்ற கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார் அரசியல் ஆர்வலர் நாராயணன்.


2008ஆம் ஆண்டில் இந்தியாவின் சந்திராயன்-1 நிலவு மிஷனில் முதலில், நிலவை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் orbiter-ஐ மட்டுமே விண்ணில் செலுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது, பின்னர் நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் நிலவின் மேற்பரப்பில் மோதும் வகையில் ஒரு impactor-ஐயும் சேர்த்து அனுப்பினால் சந்திராயன்-1 மிஷனுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று Moon Impact Probe சேர்க்கப்பட்டது.


2008-ஆம் ஆண்டில் திட்டமிட்டபடி நமது தேசிய கொடி பொறிக்கப்பட்ட MIP நிலவில் மோதியது. அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பெயர் கவனிக்கப்படவேண்டியது.



ஜவஹர் பாயிண்ட்


ஜவஹர் பாயிண்ட் (Jawahar Point):


பல்கலைக்கழகம், விமான நிலையம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அருங்காட்சியகம், பூங்கா, கால்வாய், விளையாட்டு அரங்கம், அரசு திட்டங்கள் என்று பூமியில் பலவற்றில் ஒரு குடும்பத்தின் பெயரை பொறித்தவர்கள், நிலவையும் விட்டு வைக்கவில்லை.


ஆனால் 2019 சந்திராயன்-2-வின் விக்ரம் லேண்டர் தொடவிருக்கும் இடத்திற்கு விக்ரம் என்று பெயரிடப்படலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் தெரிவித்துள்ளார். விக்ரம் தொடவிருக்கும் இடத்திற்கான பெயரை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும், அதனை பற்றிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.


அடிப்படை வித்தியாசம் என்னவென்றால் ஒரு குடும்பத்தின் பிடியிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரை பல அரசு திட்டங்களுக்கும், உட்கட்டமைப்பு விடயங்களுக்கும் சூட்டிக்கொள்வதும் காங்கிரஸ் கட்சியின் பழக்கமாக இருக்கும் நிலையில், சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரையும், மதிப்பு மிக்க சாதனையாளர்களின் பெயரை வைப்பது இன்றைய பாஜக-வின் மேம்பட்ட அரசியல் அறிவை கட்டுவதாக அரசியல் ஆர்வலர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


Similar News