தொடங்கியது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் !
தொடங்கியது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் !
ஜெயலலிதா என்ற வார்த்தை தமிழக மக்களின் மனதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. அவரின் பிரிவை தமிழக மக்களால் இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அப்படி ஒரு ஆளுமை. அவரை தெய்வம் போல வணங்கோவோர் பலர் உள்ளனர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாகவும், வெப் சீரிஸ் ஆகவும் எடுக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதில் இயக்குனர் விஜய் எடுக்கும் இப்படத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
லிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடிக்க தமிழ் சினிமா நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போட்டோகிராபி பணிகள் நேற்று தொடங்கியுள்ளதாம்.