வந்தது வந்தேபாரத் : ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு இன்று அமைச்சர் அமித் ஷா போட்ட பிள்ளையார் சுழி.!

வந்தது வந்தேபாரத் : ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு இன்று அமைச்சர் அமித் ஷா போட்ட பிள்ளையார் சுழி.!

Update: 2019-10-03 10:24 GMT

டெல்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீரில் கத்ரா வரை இரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். வந்தேபாரத் எக்பிரஸ் என்ற இந்த இரயில் சேவையின் மூலம் பயணம் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


சாலை மார்க்கமாக செல்லவேண்டுமென்றால் 12 மணி நேரம் ஆகும் என்று இருந்த நிலையில், குறித்த பயண தூரத்தை இனி 8 மணி நேரத்தில் அடையலாம். வந்தேபாரத் எக்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தியதன் மூலமாக காஷ்மீரின் வளர்ச்சி தொடங்குவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


இன்னும் 10 ஆண்டுகளில் காஷ்மீர் இந்தியாவின் முன்னேறிய மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறும். சுற்றுலா மூலம் வருவாய் பெருக்கப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்கப்படும். ஆன்மீக சுற்றுலா பெருவளர்ச்சியடையும். காஷ்மீர் மக்களுக்கு நவராத்திரி பரிசாக வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.




https://twitter.com/narendramodi/status/1179631197405642753

Similar News