"பொய் பரப்பும் ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது” ஊழல் வழக்கில் அஜித் பவார், விடுவிக்கப்படவில்லை! லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்ட அறிவிப்பு !
"பொய் பரப்பும் ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது” ஊழல் வழக்கில் அஜித் பவார், விடுவிக்கப்படவில்லை! லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்ட அறிவிப்பு !
மகாராஷ்டிராவில் 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நீர்ப்பாசனத் துறையில் 70000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த ஊழலில் அஜித் பவாருக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக விரசாரணை நடத்தவேண்டும் என்று 2012-ஆம் ஆண்டு கோர்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
2014-ஆம் ஆண்டு, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிப்பட்டது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் 9 வழக்குகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசில் துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றது எதிர்கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அவர்கள் எந்த வகையிலாவது சேற்றை வாரி பூசவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துத்துறை 9 வழக்கு விசாரணையை முடித்து வைத்தது. இதனை எதிர் கட்சியினர், அஜித் பவாருக்கு தொடர்புள்ள 9 வழக்குகளை ரத்து செய்துள்ளனர் என்று பொய்யை பரப்பின்னர். அவர்களுக்கு விலைபோன ஊடகங்களும், உண்மை தன்மை என்ன என்பதை கிஞ்சித்தும் ஆராயாமல் வெயிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால், முடித்து வைக்கப்பட்டுள்ள 9 வழக்குகளில் ஒன்றில் கூட அஜித் பவாருக்கு தொடர்பு இல்லை. இந்த வழக்குகள் அனைத்தும் 2 முதல் 5 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு நேற்று (25.11.2019) அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
ஆனால் ஊடகங்கள், அஜித் பவார், பாஜக கூட்டணியில் அரசில் பங்கேற்று, துணை முதல்வராக பதவியேற்றதால், அவர் மீதுள்ள வழக்குகளை பாஜக அரசு கைவிட்டுள்ளது என்று கூசாமல், தங்களின் முதலாளிகளுக்கு விஸ்வாசமாக பொய்யை பரப்பின.