ஆப்கானிஸ்தான்: போர் விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்ற 3 பேர் கீழே விழுந்து பலி !

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் டயரில் அமர்ந்து சென்ற 3 பேர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-08-16 12:37 GMT

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் டயரில் அமர்ந்து சென்ற 3 பேர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அந்நாட்டில் மக்களாட்சி இழந்து தீவிரவாத அமைப்பின் ஆட்சி பிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆப்கானை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக, காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடக்கின்றனர். இதனிடையே அமெரிக்க போர் விமானத்தில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு ஏற முயற்சி செய்தனர்.

அப்போது மக்களின் கூட்டத்தை பொருட்படுத்தாமல் அமெரிக்க விமானி விமானத்தை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது. அப்போது வேறு வழியின்றி விமானத்தின் டயர் மீது அமர்ந்து சென்றனர். அப்போது டயரில் இருந்து 3 பேர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் வீடியோ காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source: Kumudham

Image Courtesy: Kumadam

https://www.kumudam.com/news/national/35130

Tags:    

Similar News