தர்பார் படத்திற்கு உதவும் கமல், மோகன்லால், சல்மான்கான் மற்றும் மகேஷ் பாபு.!
தர்பார் படத்திற்கு உதவும் கமல், மோகன்லால், சல்மான்கான் மற்றும் மகேஷ் பாபு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை நான்கு மொழிகளில் வெளியிடவுள்ளது என்று அனைவருக்கும் தெரியும். தற்போது படத்தின் மோஷன் போஸ்டரை 4 முன்னணி நடிகர்கள் வெளியிடவுள்ளனர்.
மேலும் ’தர்பார்’ படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் அவரும், மலையாள மோஷன் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவரும், இந்தி மோஷன் போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவரும் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரும் வெளியிடவுள்ளனர்.
ரஜினிகாந்த் படத்தின் மோஷன் போஸ்டரை அவருடைய நண்பர் கமல்ஹாசன் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.