கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: முக்கிய குற்றவாளிகள் அஷ்பாக், மொயினுதீனை குஜராத் போலீசார் மடக்கிப் பிடித்தனர்

கமலேஷ் திவாரி கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: முக்கிய குற்றவாளிகள் அஷ்பாக், மொயினுதீனை குஜராத் போலீசார் மடக்கிப் பிடித்தனர்

Update: 2019-10-23 03:47 GMT

முன்னாள் இந்து மகாசபா தலைவரான கமலேஷ் திவாரியின் வீட்டுக்கு சென்று நண்பர் போல பேசிக்கொண்டு இருந்து விட்டு, அவர் அளித்த தேநீரை அருந்திவிட்டு, ஆடு அறுப்பதைப் போல அவரது கழுத்தை மறைத்து வைத்திருந்த கத்தியால் அறுத்தனர்.பிறகு அவரை துப்பாக்கியால் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய 2 முக்கியக் குற்றவாளிகள் சிக்கினர்.


கமலேஷ் திவாரியை கொன்றவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஒருவன் பெயர் அஷ்பாகுசைன் ஜாகிர்ஹுசைன் ஷேக், மற்றொருவன் பெயர் மொய்னுதீன் குர்ஷித் பதான். அஷ்பாகுசைன் மருந்து நிறுவனம் ஒன்றில் பிரதிநிதியாகவும், மொய்னுதீன் உணவு நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்பவனாகவும் வேலை பார்த்து வந்தனர்.


திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த கொலையைச் செய்த இருவரும் சம்பவம் நடைபெற்றப் பின்னர் நேபாளம் தப்பிச் சென்றதாகவும், பிறகு அங்கிருந்து ஷாஜான்பூர் வந்து கையில் இருந்த பணத்தை தங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்ததாகவும், குஜராத் திரும்ப முயற்சிக்கையில் ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் ஷம்லாஜி அருகே குஜராத் மாநில சிறப்புப் புலனாய்வு மற்றும் அதிரடிப்படையினரால் நவீன கருவிகள் மூலம் புலனறிந்து பிடிக்கப்பட்டதாகவும் குஜராத் போலீஸ் கூறினர்.


மேலும் விசாரணைகளுக்காக அஷ்பக் மற்றும் மொய்னுதீன் ஆகியோர் உ.பி. போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள், இக் கொலையில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் ஏற்கனவே உ.பி.க்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் போலீசார் கூறினர்.


Similar News