டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 2015 ஆம் ஆண்டு கரவால் நகர் தொகுதியில் இருந்து 44,431 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியில் கபில் மிஸ்ரா முக்கியத்துவம் பெற்றார். போலி கல்வி சான்றிதழ்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜிதேந்தர் சிங் தோமர் ராஜினாமா செய்த பின்னர், கபில் மிஸ்ரா சட்டம், சுற்றுலா, நீர், கலை மற்றும் கலாச்சார அமைச்சராக சென்ற ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். டெல்லி சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கபில் மிஸ்ரா முதல்வர் கெஜ்ரிவால் அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த 2015 சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளுக்கான இடங்களில் 67 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. என்றாலும் அதற்குப் பின் கடந்த சில ஆண்டுகளாக கட்சியின் ஆதரவுத் தளம் மோசமடைந்ததுடன், ஆம் ஆத்மியின் ஆட்சி குறித்து பெரும்பாலான வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே, இந்த அதிருப்தி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் எதிரொலித்தது. ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் அனைத்து 7 இடங்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதனால் டெல்லி சட்டமன்றத்தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான மிகவும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன, என்றாலும், டெல்லியின் அனைத்து பிரச்சினைகளையும் தெரிந்த, தேர்தல் நெளிவு, சுளிவுகளைத் தெரிந்த ஒரு மையமான நபராக இருந்து தேர்தல் பணிகளை களம் காண்கின்ற முக்கிய நபர் பாஜகவுக்கு இப்போது தேவை. அந்த இடத்தில் இப்போது கபில் மிஸ்ரா தெரிகிறார்.
கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் ஒரு முன்னாள் மந்திரி என்ற முறையில், அவருக்கு கேஜ்ரிவாலின் அனைத்து பலம் மற்றும் பலகீனங்கள் குறித்து நன்றாகத் தெரியும். அவிழ்க்கப்படுவதற்குக் காத்திருக்கும் அனைத்து அழுக்கு ரகசியங்களும் அவருக்குத் தெரியும். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முகமூடியை வெளிக்கொணரும் திறன் மிஸ்ராவுக்கு உள்ளது. உதாரணமாக கெஜ்ரிவால் அரசின் உத்தரவின் பேரில் நடைபெற்ற டெல்லி ஜல் போர்டு டேங்கர் விவகாரத்தில் நடைபெற்ற மோசடி இவற்றில் முதன்மையானது.
அமைச்சரவை மாற்றம் மற்றும் கபில் மிஸ்ராவை அமைச்சரவையிலிருந்து அகற்றுவதற்கு முன்னதாக, அவர் கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார், அதில் 'குடிநீர் டேங்கர் விநியோக மேலாண்மை அமைப்பு குறித்த உண்மை கண்டறியும் குழு' ஒரு அறிக்கையை அனுப்பியது, அதில் அப்போதைய டெல்லி குடிநீர் வாரிய தலைவரும் முதல்வருமான ஷீலா தீட்சித் மற்றும் வாரிய உறுப்பினர்கள் டெல்லி ஜல் வாரியத்திற்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். "இது அம்பலப்படுத்தப்பட்ட உடனேயே, டெல்லியில் உள்ள நம் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தவும், என்னை இந்த நாற்காலியில் இருந்து அகற்றவும் முயற்சிகள் இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன் " என அக்கடிதத்தில் எழுதியிருந்தார். இது முடிந்த உடனேயே, கபில் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைவிட இன்னொரு விஷயத்தையும் அவர் அறிந்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, கபில் மிஸ்ரா சட்டவிரோதமாக பணத்தை மாற்றுவதைக் தான் கண்டதாகக் கூறினார். அதாவது " டெல்லி சுகாதார அமைச்சர், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2 கோடி ரூபாய் பணத்தை அளித்ததாக குற்றம் சாட்டினார்.
ஊழல் மோசடி மற்றும் ஊழல் எதிர்ப்புக் கட்சியின் சட்டவிரோதமான காரியங்கள் அனைத்தையும் மிஸ்ரா அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை அம்பலப்படுத்தவும் பயப்படவில்லை.
அவர் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து, அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செல்ல சக்தி பெற்றவராகவும்,ஆர்வத்துடனும் இருந்தார், இப்போது அவருக்கு எந்தவொரு தடையும் இல்லை. அப்போதிருந்து, அவர் பல பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி செய்து வந்த பண மோசடிகள் குறித்து குற்றம் சாட்டினார். ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய தொகைகளுடன் பல தேதியற்ற காசோலைகளை அவர் காட்டியுள்ளார். ஒரு சில லட்சம் முதல் தலா ரூ. 35 கோடிகள் வரை நன்கொடையாக அளிக்கப்பட்டதாக இரண்டு காசோலைகள் வரை உள்ளன. உண்மையில் சொல்லப்போனால் இது எழுபது கோடிக்கு மேல் மோசடியாகும்.
பெருந்தொகையிலான கேஜ்ரிவால் அரசின் பல திட்டங்கள் குறித்து டெல்லி நிதியமைச்சரைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. டெல்லியின் 2018-19 வரவு செலவுத் திட்ட அறிவிப்பு நாளில், ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்த போதிலும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உண்மையான செலவு ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 10% கூட இல்லை என்று குறை கூறினார். பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கைக் கூட கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிட ஆம் ஆத்மி தவறிவிட்டது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.
சட்டசபையில் கெஜ்ரிவாலுக்கு 10% க்கும் குறைவான வருகை இருந்ததால் அவர் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தார். எனவே, கெஜ்ரிவாலை வீழ்த்த அவரிடம் நிச்சயமாக ஒரு கோடரி உள்ளது, எனவே டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அவருக்கு எத்தகைய பொறுப்பு அளித்தாலும் அவர் ஆற்றலுடனும், ஆர்வத்துடனும் செயல்படுவார். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான அவருடைய பழி தீர்க்கும் பகைமை உணர்வு தவிர, மிஸ்ராவுக்கு என சமூக ஊடகங்களில் மிகப்பெரிய தளம் உள்ளது, மேலும் பாஜகவின் அணுகுமுறையைப் பொருத்தவரை டெல்லி வாக்காளர்களை நோக்கி தங்கள் திட்டங்களை கொண்டு செல்வதற்கு இது ஒரு சொத்தாக இருக்கும். மேலும், மிஸ்ரா ஒரு தனிநபராக இருந்து கொண்டு நேர்மையான குணத்துடன் ஊழல், முறைகேடுகளை எதிர்த்து வருவதும், அவரின் ஒருமைப்பாட்டு குணங்களும், நம்பகமான செயல்பாடுகளும் டெல்லி மக்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்.
அதற்கும் மேலாக, மிஸ்ரா பிறரை தன் வசப்படுத்துவதில் வேடிக்கையான மற்றும் நகைச்சுவையான பேச்சாளர், மக்களை உடனடியாக தன வசப்படுத்துகிறார். நகர்ப்புற வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, எத்தகைய தலைமைப் பண்புகளை எதிர்பார்க்கிறார்களோ அதற்கு மிகவும் பொருத்தமானவர். வரவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில், மிகவும் பிரபலமான தலைவராகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான ஒரு போராட்டத்தில் காவி கட்சிக்கு மிஸ்ரா முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் இருக்கப்போகிறார்.