கர்மா என்பது என்ன ? ஆன்மீக ரீதியில் ஓர் ஆழமான பார்வை
கர்மா என்பது என்ன ? ஆன்மீக ரீதியில் ஓர் ஆழமான பார்வை
கர்மா என்பது நாம் செய்கின்ற செயல் அன்றி வேறெதுவும் அல்ல. நாம் செய்யக்கூடிய செயல்கள் ஒரு மனிதனுடைய ஆன்மாவில் பதிவை ஏற்படுத்த தவறுவதில்லை.
இதை ஒரு வாழ்வியல் உதாரணத்தின் மூலம் நம்மால் உணரமுடியும். உதாரணமாக, அரிசி வியாபாரம் செய்கின்ற ஒரு மனிதன் விலை உயர்ந்த அரிசியையும் தரமற்ற குறைந்த விலையையுடைய அரிசியையும் கலந்து அதை தரமுள்ள அரிசியின் விலைக்கு விற்றுவிடுகிறான் என வைத்து கொள்வோம்.
இங்கு அவனுக்கு இரண்டு விதமான கர்மங்கள் இதன் மூலம் வந்து சேர்கின்றன. ஒன்று செயலின் நேரடி விளைவு, இரண்டு செயலின் தன்மை ஏற்படுத்தும் விளைவு.
முதலாவது செயலின் நேரடி விளைவான லாபம் அவனுக்கு வந்து சேர்கிறது. இரண்டாவது விளைவின் தன்ன்மை, அதாவது தவறான வழியில் அந்த லாபத்தை ஈட்டியதால் அந்த லாபாம அவனுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாமல் போய்விடும். அப்படியே செய்தாலும் அந்த தொகை வேறு ஒரு சூழ்நிலையில் நஷ்டமாக போய்விடும். இரண்டாவதாக அப்பாவியான ஒருவரை ஏமாற்றியதன் விளைவாக அந்த செயலின் பதிவு ஆன்மாவில் பதிந்து அடுத்தடுத்து பிறவிகளில் தொடர்ந்து வரும். அது ஒரு வியாதியாகவோ அல்லது மற்ற வழிகளிலோ தொடர்ந்து வந்து அலைகழிக்கும்.
சில வியாதிகள் என்ன முயற்சி செய்தாலும் தீராமல் தொடர்ந்து கொண்டிருப்பதை பலர் கண்டிருக்கலாம். இது போன்ற உபாதைகளுக்கான காரணம் முன் வினை பயன்களாக இருக்க வாய்ப்புண்டு. இதை போன்ற வியாதிகளை குணப்படுத்த வேண்டுமானால் தீய கர்மாக்களை அழிக்கும் வழிமுறைகளை ஆன்மீக ரீதியில் செய்தாலே ஒழிய ஒருவர் மீண்டு வர இயலாது. இங்கு பிரச்சனை என்னவென்றால் எல்லோராலும் தங்களுடைய முந்தைய கர்ம வினைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அது ஒரு தகுந்த குருவின் ஆசி பெற்ற சிலராலேயே முடிகிறது.