தொழிலதிபரிடம் மோசடி! சிக்கிய கருணாநிதியின் குடும்பத்தார்?

தொழிலதிபரிடம் மோசடி! சிக்கிய கருணாநிதியின் குடும்பத்தார்?

Update: 2019-10-17 07:30 GMT

ஏமாற்று வழியில், ஒரு தொழிலதிபரை திசைதிருப்பி, அவரிடம் 80 லட்சம் ருபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், கருணாநிதி மகள் செல்வியின் மருமகன் மற்றும் இரு நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னையில் அழகு சாதன பொருட்களை தொழில் செய்யும் தினேஷிற்கு வேலூரை சேர்ந்த சாஹீர் அஹ்மத் கான் தொழில்ரீதியாக பழக்கம் பட்டுள்ளார்.சாஹீர் அஹ்மத் கான் அவருக்கு தெரிந்த ஒருவர் 1 கோடி ரூபாய்க்கு 100 ருபாய் நோட்டாக வைத்துள்ளதாகவும், அதை 500 மற்றும் 2000 ருபாய் நோட்டாக மாற்ற விரும்புகிறார் என்றும் தினேஷிடம் கூறினார். மேலும், தினேஷ் 80 லட்சம் ரூபாய்க்கு 500 மற்றும் 2000 ருபாய் நோட்டுக்கள் அளித்தால் போதும் எனவும், மீதுள்ள 20 லட்சத்தை தினேஷ் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால் ஆசை அடைந்த தினேஷ், நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள சன் ரைஸ் அவென்யூவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு 80 லட்சம் ரூபாயை கொடுக்க சென்றுள்ளார்.


அங்கு சாஹீர் அஹ்மத் கான் மற்றும் இரு நபர்கள் இருந்துள்ளன.1 கோடி ரூபாய்க்கு 100 ருபாய் நோட்டு உள்ளது என்று கூறி இரு பைக்களை கொடுத்துள்ளனர். கடைசியில் அதி பைகள் மட்டுமே இருந்ததால் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். சாஹீர் அஹ்மத் கான், தான் பையை மாற்றி கொண்டுவந்ததாக கூறி சரியான பையை கொண்டுவருவதாக சென்ற சமயத்தில், மீதி இருந்த இருவர் தினேஷை சமாதானம் படுத்துவது போல் நடித்து, தப்பி சென்றுவிட்டனர்.


இதனால் காவல்துறையிடம் சென்று தினேஷ் புகார் அளித்தார். காவல்துறையின் விசாரணைக்கு பிறகு, இதில் மூளையாக செயல்பட்டவர், திமுக தலைவர் கருணாநிதியின் மகளான செல்வியின் மருமகன் ஜோதிமணி என்று தெரியவந்தது.


இதனை அடுத்து சாஹீர் அஹ்மத் கான் மற்றும் ஜோதிமணியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்க்கு பிறகு ஒரு வழக்கையும் பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஜோதிமணி 80 லட்சம் ரூபாயும் தினேஷிடம் ஒப்படைத்ததாக கூறுகிறார். மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   


Similar News