முன்னாள் முதல்வர்களுக்கான காஷ்மீர் அரசு பங்களாவை காலி செய்தார் குலாம் நபி ஆசாத்! சிறப்பு சலுகைகள் ரத்துக்குப் பின் தானாக முன் வந்தார்.!
முன்னாள் முதல்வர்களுக்கான காஷ்மீர் அரசு பங்களாவை காலி செய்தார் குலாம் நபி ஆசாத்! சிறப்பு சலுகைகள் ரத்துக்குப் பின் தானாக முன் வந்தார்.!
இந்தியாவில் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களுக்காக டெல்லியில் அவர்களது ஆயுள் காலம் வரை குடியிருக்க பங்களா ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதியை வேறு எந்த மாநிலங்களின் முதல்வருக்கும் அரசியல் சாசன சட்டம் வழங்கவில்லை.
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு மட்டும் தங்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற மாநில முதல்வர்களுக்கு இல்லாத ஆயுள்கால பங்களா உட்பட பல சிறப்பு வசதிகளை வழங்கியது. குறிப்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத், முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் இந்த பங்களாக்களை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது அரசியல் சாசன சட்டத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய அரசியல் சட்டம் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் தங்கள் ஆயுள்கால பங்களாக்களை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனது வாடகை இல்லாத ஆயுட்காலம் முழுவதற்கும் அனுபவிக்க தரப்பட்ட அரசாங்க பங்களாவை காலி செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளார். "முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் விருந்தினர் மாளிகையை காலி செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் நிர்வாகம் இதுவரை எங்களிடம் இன்னும் அந்த சொத்துக்களை ஒப்படைக்கவில்லை."
தற்போதுள்ள சட்டப்படி முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்கள் பங்களாக்களை காலி செய்ய வேண்டியிருக்கும். இருவருமே ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.