காஷ்மீர் பற்றி தி.மு.க- வின் கருத்து அப்பட்டமான தேசவிரோதம்” - பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் கடும் கண்டனம்!!

காஷ்மீர் பற்றி தி.மு.க- வின் கருத்து அப்பட்டமான தேசவிரோதம்” - பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் கடும் கண்டனம்!!

Update: 2019-08-13 09:25 GMT


காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்று தி.மு.க  கூறுவது அப்பட்டமான தேசவிரோதம்” என்று பா.ஜ.க. ஐ.டி பிரிவு மாநில தலைவர் CTR. நிர்மல் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-


ரஜினிகாந்த், மோடி - அமித்ஷா பற்றி குறிப்பிட்டது இருவரின் நட்பை போற்றி, எடுத்துக்காட்டாக கிருஷ்ணன் - அர்ஜுனன் போல் என்ற  குறிப்பிட்டு கூறினார். இதை கடுமையாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க எதிர்ப்பதற்கு அவசியம் இல்லை.


ரஜினிகாந்த் மட்டுமல்ல, பாகிஸ்தானைத் தவிர உலக நாடுகளே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை ஆதரித்து இந்தியாவிற்கு துணை நிற்கிறது. ஆனால் தி.மு.கவும், காங்கிரசும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றன. 


கச்சத்தீவை தாரைவார்த்த பொழுது ஏற்படாத உணர்ச்சி,  காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைத்தபோது ஏற்படுவது மிக கேவலமான செயல்.


காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் மகிழ்ச்சியோடு காணப்படும் நிலையில், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை என்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்றும் தி.மு.க ஒப்பாவி வைப்பது அப்பட்டமான தேசவிரோத செயல்.  


பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டு தேச நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் தி.மு.கவினர். மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை, ரஜினிகாந்த் போன்று யாராவது ஆதரித்து பேசினால், அவர்களை எதிரியாக பார்க்கும் மோசமான மனநிலையை மாற்றி நாட்டு நலனுக்கான ஆரோக்கியமான அரசியலில் தி.மு.க ஈடுபட வேண்டும். 


அன்று சுயநலத்திற்காக கச்சத்தீவை தாரை வார்க்கும்போது காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்ட தி.மு.க, இன்று அதை மீட்போம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது நகைப்பிற்கு உரியது. இவர்கள் அரசியலுக்காகவும், சுயநலத்திற்காகவும் நாட்டை காட்டிக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. 


இவ்வாறு பா.ஜ.க. ஐ.டி பிரிவு மாநில தலைவர் CTR. நிர்மல் குமார் குறிப்பிட்டுள்ளார்


Similar News