காஷ்மீர் ஸ்டாலின்! பாராளுமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்த எம்.பி !

காஷ்மீர் ஸ்டாலின்! பாராளுமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்த எம்.பி !

Update: 2019-08-05 09:43 GMT


பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைப் போலவே, காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி முகமதுவும் தனது சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


மாநிலங்களவையில் இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். 


இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 ஆக பிரிக்கப்படுவதாக அமித்ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என்று அமித்ஷா அறிவித்தார். 


அப்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து, 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நகல்களை காஷ்மீரைச் சேர்ந்த மெகபூமா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி. முகமது பயாஸ் கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டார்.


இதற்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகும் அவர் தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டதால், அவரை அவையில் இருந்து வெளியேற்றுமாறு வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். 


இதனைத்தொடர்ந்து சபை காவலர்கள், அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.





அவர் வெளியே வரும்போது தனது சட்டையை கிழித்துக்கொண்டு வந்தார். அது, தி.மு.க தலைவர் ஸ்டாலின், சட்ட சபையில் இருந்து சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வந்தது போலவே இருந்தது.





இதுதொடர்பான போட்டோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்று முதல் இவர், காஷ்மீரின் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார் என்று தமிழக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.



Similar News