மத உணர்வுகளை உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள் : ஒவைசிக்கு 'தியாகி சாவர்க்கர்' பேரன் சூடு பறக்க அறிவுரை.!

மத உணர்வுகளை உங்கள் வீட்டோடு வைத்துக் கொள்ளுங்கள் : ஒவைசிக்கு 'தியாகி சாவர்க்கர்' பேரன் சூடு பறக்க அறிவுரை.!

Update: 2019-10-18 06:10 GMT


இந்திய சுதந்திர வரலாற்றில் தனது தீவிரமான போராட்டத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் கொடுமைகளை அனுபவித்தவர் வீர சாவர்க்கர். இந்துத்வா தத்துவவாதியும், வழக்கறிஞருமான இவரின் தியாகத்துக்காக பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என பாஜக பரிந்துரை செய்துள்ளது.


இந்த நிலையில் மகாத்மா காந்தி கொலையில் சாவர்க்கரை இணைத்து தவறாக பேசிய AIMIM கட்சித் தலைவர் ஓவைசி சாவர்க்கருக்கு பாரதரத்னா விருது தரக்கூடாது என பேசினார்.


இந்த நிலையில் "இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலில் நுழையட்டும், ஆனால் மதத்தை வீட்டுக்குள் வைத்து விட்டு, வெளியில் பொதுநல வாதியாக வரவேண்டும் என்கிற மத சார்பற்ற எண்ணங்கள் கொண்டவர் சாவர்க்கர். அவர் மீது குற்றம் சொல்லும்  ஒவைசி முதலில் மதத்தை மூட்டை கட்டி வீட்டுக்குள் வைத்துவிட்டு பொதுநலவாதியாக வெளியில் வாருங்கள்"  என்று சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் ஒவைசிக்கு அறிவுரை கூறியுள்ளார்.


Similar News