கனிமொழி – திருமாவளவனுக்கு விருந்தும், பரிசு பொருட்களும் வழங்கிய ராஜபக்சேவின் தம்பி கோத்தபய, இலங்கை அதிபராக தேர்வு!
கனிமொழி – திருமாவளவனுக்கு விருந்தும், பரிசு பொருட்களும் வழங்கிய ராஜபக்சேவின் தம்பி கோத்தபய, இலங்கை அதிபராக தேர்வு!
இலங்கையில் நேன்று (16.11.2019) 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க, தேர்தல் நடந்தது. மொத்தம், 159 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்று இருந்தனர். நேற்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. 81 சதவீம் வாக்குப்பதிவு
நடந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்..
இந்த தேர்ததிலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும் வீட்டுவசதி மற்றும் கலாச்சார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். இவர்கள் உள்பட
35 பேர் களத்தில் இருந்தனர். இருந்தாலும் போட்டி கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித்
பிரேமதாசாவுக்கும்தான் இருந்தது.
தேர்தல் முடிந்ததும் நேற்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இன்று காலை முதல்
முன்னணி நிலவரம் தெரியதொடங்கியது. தொடக்கத்தில் கோத்தபய ராஜபக்சேவும், சஜித்
பிரேமதாசாவு மாறி மாறி முன்னணி வகித்தனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல கோத்தபய
தொடர்ந்து முன்னணி வகுத்தார். அதோடு அவரது முன்னணி விகிதமும் கூடிக்கொண்டே போனது.
இலங்கை சட்டப்படி 50 சதவீத
வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராவார். கோத்தபய 50.55 சதவீதம் (
56 லட்சத்து 95 ஆயிரத்து 45)
வாக்குகளையும், சஜித் பிரேமதாச
43.49 சதவீதம் ( 46 லட்சத்து 82 ஆயிரத்து 726
) வாக்குகளையும் பெற்றனர்.
இதனால்
கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் விடுதலைப்புலிகளையும், ஏராளமான அப்பாவி தமிழ் மக்களையும் கொன்று குவித்தற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. அப்போது இவர் பாதுகாப்பு செயலராக பதவி வகித்தார்.
இலங்கையில் தமிழ் இன அழிப்பு
முடிவுக்கு வந்ததும் அப்போததைய அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அப்போதைய
பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவும் கொடுத்த விருந்தில் கனிமொழி, திருமாவளவன்,
டி.ஆர்.பாலு உள்பட திமுக கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்டு வயிறார உண்டுவிட்டு
பரிசிலும் வாங்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.