குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தான் சிறையில் நலமுடன் இல்லை!! நேரில் சென்று பார்த்த இந்திய தூதரக அதிகாரிகள் விளக்கம்!!
குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தான் சிறையில் நலமுடன் இல்லை!! நேரில் சென்று பார்த்த இந்திய தூதரக அதிகாரிகள் விளக்கம்!!
வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி சந்தித்து பேசினார். அப்போது பாகிஸ்தான்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை, உளவு பார்த்ததாகக் கூறி 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. இவ்வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017-ல் குல்பூஷனுக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த ஜுலையில் உத்தரவிட்டது. மேலும் சர்வதேச ஒப்பந்தங்களின்படி சட்ட உரிமைகளை குல்பூஷனுக்கு அளிக்கவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இதனை ஏற்று இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா இன்று குல்பூஷனை சந்தித்து பேசினார்.
2 மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது குல்புஷன் ஜாதவ் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்புஷன் ஜாதவ்வுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ராவிஷ் குமார், ’பாகிஸ்தான் கூறுவது போல குல்புஷன் ஜாதவ் நலமுடன் இல்லை. பாகிஸ்தான் நாட்டின் போலியான குற்றச்சாட்டுகளின் காரணமாக குல்புஷன் ஜாதவ் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.