லதாக் என்றால் என்ன என்று தெரியுமா ? எங்கு இருக்கிறது என்று தெரியுமா ? தி.மு.க எம்.பி க்களை கிழித்த லதாக்கின் இளம் எம்.பி !
லதாக் என்றால் என்ன என்று தெரியுமா ? எங்கு இருக்கிறது என்று தெரியுமா ? தி.மு.க எம்.பி க்களை கிழித்த லதாக்கின் இளம் எம்.பி !
காஷ்மீருக்கு அழிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கு NDA கூட்டணியில் இல்லாத பல காட்சிகள் ஆதரவு அளித்தது. காங்கிரஸும், தி.மு.க வும் கடுமையாக எதிர்த்தனர். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லதாக் பகுதிகளை சார்ந்த மக்களின் உரிமைகள் பறிக்கபடும் என்று குரல் எழுப்பினர். இதை பல தமிழக ஊடகங்கள் "காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக தமிழக எம்.பி க்கள் குரல் கொடுத்தனர்" என்று செய்தி வெளியிட்டது. ஆனால் உண்மை வேறு.
லதாக் பகுதியை சேர்ந்த இளம் எம்.பி ஜம்யங்-நாம்கி நேற்று பாராளுமன்றத்தில் பேசினார். காஷ்மீர் மற்றும் லதாக்கை பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் லதாக்கிற்கு இதற்கு முன் வந்திருக்கிறார்களா? லதாக் என்றால் என்ன என்று தெரியுமா ? என்று கிழித்தார். கடைசி வரை தி.மு.க எம்.பி க்கள் மவுனம் காத்தனர்.
லதாக் பகுதியை இதுவரை யாரும் கண்டுகொண்டதில்லை, பள்ளிகள் இல்லை, மருத்துவமனைகள் இல்லை. அந்த வலி எங்களுக்கு தான் தெரியும் என்றார். மத்திய அரசின் இந்த முடிவை ஒவ்வொரு லதாக் மக்களும் கொண்டாடுகின்றனர் என்று கூறினார். அர்த்தமில்லாமல் கூக்குரலிடுவதும், அதற்கு இந்த தமிழக ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதும் புதிதா என்ன !