“ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரியதாக உள்ளது” - காங்கிரஸ் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட காங்கிரஸ் துணை முதல்வர்!!
“ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்குரியதாக உள்ளது” - காங்கிரஸ் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட காங்கிரஸ் துணை முதல்வர்!!
ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு கவலையளிப்பதாக உள்ளது. இது உண்மைதான்.
தோல்பூர், ஆல்வார், பெஹ்ரர் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில்தான் உள்ளது. இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும்.
ஜெய்ப்பூரில் சுதந்திர தினத்தன்று பல்வேறு இடங்களில் கல்வீச்சு நடந்தது மட்டுமின்றி காவல்நிலையம் ஒன்றுக்கும் மர்ம கும்பல் தீ வைத்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியை காங்கிரஸ் துணை முதல்வரே குறை கூறியிருப்பது, காங்கிரஸ் கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.