ஒழுங்கா எழுத கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள்-பாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்!

ஒழுங்கா எழுத கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள்-பாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்!

Update: 2019-09-08 01:28 GMT

இந்தியா நிலவின் தென் துருவத்தினை ஆய்வு செய்ய அனுப்பபட்ட சந்திராயன் - 2 ன் லேண்டர் நிலவில் தரை இறங்கும் சாதனம், இறங்குவதற்கு முன், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையுடனான, தகவல் தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டர்


இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக பெங்களூரு இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அறிவித்தார். இருந்தபோதும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். உலக தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.


இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பகத் உசைன் கேலியாக ஒருபதிவை ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்..


இதனைத்தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசைனை விமர்சித்துப் பதிவிட்டனர். அதில் ஒருவர், சேட்டிலைட் என்பதற்கு முதலில் ஸ்பெல்லிங்கை கற்றுக் கொண்டு பிறகு பேசுங்கள் என கமெண்ட் அடித்துள்ளார். உசைன் இட்ட பதிவில் satellite என்பது Sattelite என போடப்பட்டிருந்தது.


இதையடுத்து #WorthlessPakistan எனும் ஹேஷ்டாக்கினை டிரெண்ட் செய்தனர். .'இந்தியாவை அவமானப்படுத்த முயன்றவர்கள், இறுதியில் தாங்கள் அசிங்கப்பட்டதே மிச்சம்'


Similar News