புதிய உச்சத்தை தொடுவோம்! பிரதமர் மோடிக்கு பட்னாவிஸ் உறுதி!
புதிய உச்சத்தை தொடுவோம்! பிரதமர் மோடிக்கு பட்னாவிஸ் உறுதி!
2-வது முறையாக முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். ட்விட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், “முதல்வராக பதவிஏற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவாருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மகாராஷ்டிாவின் ஒளியமயமான எதிர்காலத்துக்கு 2 கட்சிகளும் சேர்ந்து உழைப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பாஜக தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் தேவேந்திர பட்னாவிஸ்க்கும், துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவாருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சீரிய தலைமை மற்றும் சிறந்த வழிகாட்டுதலின்படி மகாராஷ்டிராவை மிகச் சிறந்த மாநிலமாக உருவாக்குவோம், புதிய உச்சத்தைத் தொடுவோம்’’ எனக் கூறியுள்ளார்.