மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழுநோயாளிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு - தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த எடப்பாடியார்.!

மாற்றுத்திறனாளிகளுக்கும், தொழுநோயாளிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு - தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த எடப்பாடியார்.!

Update: 2019-11-12 12:16 GMT

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.


அதிமுக சார்பில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இது ஆளும் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.


தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் புதிய திருப்புமுனையாக, காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும் தொழுநோயாளிகளுக்கும் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.




https://twitter.com/SPVelumanicbe/status/1194194294984380416

Similar News