உடனுக்குடன் பணம் 250 மாவட்டங்களில் இன்று முதல் லோன் மேளா !

உடனுக்குடன் பணம் 250 மாவட்டங்களில் இன்று முதல் லோன் மேளா !

Update: 2019-10-03 03:54 GMT

நாடு முழுவதும் கடன் வழங்கும் திருவிழா, நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடன் திருவிழாவானது இன்று தொடங்கியது. இந்தியா முழுவதும் உள்ள, சுமார் 250 மாவட்டங்களில் கடன் வழங்கும் திருவிழா இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு நடைபெறும் இதன் அடுத்த கட்டமாக 150 மாவட்டங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கி , அக்டோபர் 25 வரை, கடன் திருவிழா நடைபெற உள்ளது.


இந்த லோன் மேளாவில் முதலில் பொதுதுறை வங்கிகள் மட்டுமே பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது பின் பொதுத்துறை வங்கிகளுடன், தனியார் வங்கிகளும் சேர்ந்து, கடன் தொகையை உடனடியாக வழங்க, நடவடிக்கை எடுத்து வருகின்றன.


இந்த மாதம் பண்டிகை மாதம் என்பதால் மக்கள் தற்போதே ,துணி வாங்குவதில் இருந்து பலகார பொருட்கள் வாங்குவதற்கு தயாராகிவிட்டனர், சிறு குறு தொழில் செய்வோரும் அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டனர்.


இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டும் லோன் மேளா திருவிழாவை நடத்துவதற்கு, அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்தன. பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து தனியார் வங்கிகளும் இந்த லோன் மேளா வில் பங்கு கொள்ள வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் இதனை தொடர்ந்து தனியார் வங்கிகளும் இந்த லோன் மேளாவில் இணைத்து கொண்டனர்.


பொதுத்துறை வங்கிகளின் செயல்திறன் மதிப்பீட்டு கூட்டத்தில், 400 மாவட்டங்களில், வங்கிகளை மறுசீரமைக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து கடன் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற, முடிவு எடுத்தனர்.


இந்த நிலையில்,லோன் மேளா வழங்கும் திட்டத்தில், பாரத ஸ்டேட் வாங்கி பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட , பல்வேறு வங்கிகள் 250 மாவட்டங்களில் நடைபெறும் லோன் மேளாவில் பங்கேற்கின்றன


இதன் மூலம் சில்லரை வர்த்தகம், செய்வோர் விவசாயம், செய்வோர் மற்றும் வீடு, கார் கல்வி, குறு, சிறு தொழில் செய்வோர் தனிப்பட்ட தேவை உட்பட பல்வேறு வகையில் கடன் தொகை வழங்கப்படும். வங்கிக் விதிமுறைகளை பின்பற்றி, கடன் வாங்குவதற்கான விதிமுறை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், இந்த கடன் தொகை, உடனுக்குடன் அங்கேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த திருவிழாவின் போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த கடன் பெறுபவர்கள், வாங்கிய கடனை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முறையில் திரும்ப செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், சில்லரை வியாபாரிகள் முதல், தனி நபர்கள் வரை, அனைவரும் மின்னணு 'பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு மாற்றப்படுவர்.


லோன் மேளா நடைபெறும் இடம், நேரம் குறித்து, உள்ளூர் வணிகர் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Similar News