சென்னை லயோலா கல்லூரி மற்றும் திருச்சி லயோலா கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் இயேசு திருச்சபையினர் செய்யும் ஊழல்கள், நிர்வாக முறைகேடுகள், பாலியல் புகார்கள் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றமும், கேரள நீதிமன்றங்களும் கூட சமீபத்தில் திருச்சபையினர் செய்யும் அநியாயங்கள் குறித்து வேதனையுடன் கருத்துக்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் கென்னடி இந்த முறைகேடுகள் குறித்து புகார் கூற வாடிகன் சென்றும் அவர்களின் விசாரணை பயனின்றி உள்ளதாவும், குற்றங்களை மறைப்பதில் அவர்களின் பங்கும் இருப்பதாக மன வருத்தத்துடன் சம்பவங்களை கூறியுள்ளார். திருச்சபைகளின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு வெளிச்ச்சம் போட்டு காண்பிக்க அவர் ஹெயில் மேரி என்கிற திரைப்படத்தையும் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும், வரவிருக்கும் ஹெயில் மேரி திரைப்படத்தின் இயக்குநருமான ஆர்.ஜோசப் கென்னடி, இயேசு சங்கங்களின் முறையற்ற, ஒழுங்கீனமான செயல்பாடுகளால் பல முறை ஏமாற்றமடைந்து , கடைசியில் அவர் தனது நம்பிக்கையை இழந்தவர் ஆவார்..
முன்னதாக ரோமில் நடந்த உலகளாவிய மதகுருக்கள் துஷ்பிரயோக உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதிநிதியாக சென்ற கென்னடி, ஜேசுயிட்டுகளின் உயர் நிலை ஜெனரலான பிரான்சிஸ் அர்த்துரோ சோசா அவர்களை சந்தித்து, சென்னை லயோலா கல்லூரி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் மதுரை ஜேசுட் பகுதி மதகுருமார்களின் துஷ்பிரயோகம், நெருக்கடி மற்றும் மூடி மறைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து புகாரளித்தார்.
ஆனால், இயேசுவின் சங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத குறைபாடுள்ள விசாரணையை நடத்தியது. இந்த விவகாரத்தில் தெற்காசியாவிற்கான ஒரு பிராந்திய உதவியாளரின் தாமதமான பதில், மதுரை பிராந்தியத்தில் உள்ள ஜேசுட் பாதிரியார்களின் கிறிஸ்துவுக்கு எதிரான நடத்தைகள் குறித்து நான் எடுத்துரைத்த கடுமையான பிரச்சினைகள் மற்றும் கவலைகளுக்குரிய பிரச்சினைகளின் தீவிரத்தை மந்தமாகியது , ”என்று கென்னடி கூறினார்.
தங்களின் ஒவ்வொரு செயலிலும் ஊழல் மற்றும் ஒழுங்கீனம் நிறைந்த லயோலா கல்லூரியின் தற்போதைய முதல்வர் மற்றும் முன்னாள் மாணவர் இயக்குனர் மற்றும் தற்போதைய லயோலா முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் மற்றும் ஊழல் குருமார்கள், சில அலுவலக பொறுப்பாளர்கள் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் அளித்ததாகக் கூறினார்.
"கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஜேசுட் ஆணையின் மூத்த அதிகாரிகள் என்ற வகையில், அவர்களிடம் நான் தெரிவித்த கவலைகள் மற்றும் பிரச்சனைகளையும், அவற்றிலுள்ள உண்மைகளையும் அவர்கள் ஆராய்ந்து தவறுகளை சரி செய்வார்கள் என்று நான் நம்பினேன், பிரார்த்தனை செய்தேன், ஏனென்றால் நம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்
”“எனினும், நான் தவறாக நிரூபிக்கப்பட்டுள்ளேன். கிறிஸ்து போதனைகளின் முகமான தலைவர்களிடமிருந்து நான் நல்லதை எதிர்பார்க்கலாம் என்று நான் நம்பினேன், ஆனால் வாழ்க்கையில் ஒரு எளிய பாடத்தை கற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்; இன்று திருச்சபையில் உள்ள பாதிரியார்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தண்ணீரில் போடப்பட்ட கற்களைப் போன்றவர்கள், அவர்கள் இயேசுவின் போதனைகளால் சூழப்பட்டிருக்கிறார்களே தவிர அவருடைய போதனைகள் ஒருபோதும் அவர்களின் கடினமான இதயங்கள், மனங்கள் மற்றும் ஆன்மாக்களில் ஊடுருவுவதில்லை. ”என்று கென்னடி மேலும் கூறினார்.
"துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மேல் காட்டப்படும் இத்தகைய வினோதமான உணர்வின்மை, கண்டுகொள்ளாத் தன்மை இவற்றால் திருச்சபையால் தன்னை விசாரிக்க முடியாது என்ற கருத்தை குற்றவாளிகளிடையே மீண்டும் வலுப்படுத்துகிறது. இவை பாதிக்கப்பட்டவர்களும், வழக்கை எடுத்துக் கூறியவர்களும் விரும்பிய சீர்திருத்தங்கள் அல்ல. ” என கோவா க்ரோனிகில்ஸ் பத்திரிகை தலைமை ஆசிரியரும், ஹெயில் மேரி திரைப் படத் தயாரிப்பாளருமான சேவியோ ரோட்ரிக்ஸ் இவ்வாறு உணர்ந்து கூறியுள்ளார்.
"இயேசுவின் சமூகம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களின் குரலைக் கேட்பதாக இருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் சிவில் அதிகாரிகள் மற்றும் வெளியில் புகாரளிக்க பாதிரியார்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள் என," சேவியோ மேலும் கூறினார்.
ஊழல் நிறைந்த ஜேசுயிட்டுகள் சென்னை லயோலா கல்லூரியின் பழைய மாணவர்களை தங்களது அனைத்து குற்றங்களையும் மறைக்க ஒரு கேடயமாக தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், ஒரு குறிப்பிட்ட வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய ஒரு பழைய மாணவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவரை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டார். ஆனால், அனைத்து துஷ்பிரயோக வழக்குகளும் சர்ச் ஊழியர்களின் குற்றங்களை மூடி மறைக்கும் மற்றும் குற்றங்களை வெளியில் தெரியாமல் பாதுகாக்கும் அதே முறையைப் பின்பற்றி வருகின்றன , இது இன்றுவரை தொடர்கிறது." ஆனால் இந்த விஷயங்கள் குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஸ்ரீ. எச். ராஜா கேள்விகள் எழுப்பியதாக ”சேவியோ குறிப்பிட்டார்.
பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட பல ஜேசுயிஸ்ட்டுகள் மதுரை ஜேசுட் பிராந்தியத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மூத்த பதவிகளை வகிக்கின்றனர்.
மதுரை ஜேசுட் மாகாண நியமனங்கள் ஜேசுட் ஆளுகையின் குழப்பமான சூழல்களை தோற்றுவிக்கின்றன .
இந்தியன் எக்ஸ்போஸ் இதற்கு முன்பு பிஷப் பிராங்கோவின் நடத்தைகள் குறித்தும் , திருச்சி செயின்ட் ஜோசப்பின் ஜேசுட் பாதிரியாருமானFr.ராஜரத்தினம் குறித்தும் இவர்களின் ஒழுங்கின்மை குறித்து குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தது. அமெரிக்காவில் உள்ள இயேசு திருச்சபைகளில் நம்பகமான குற்றம் சாட்டப்பட்ட ஜேசுயிட் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு சிவில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றனர். ஆனால் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஜேசுட் Fr. ராஜரத்தினம் தொடர்ந்து தீவிர ஊழியத்தில் பணியாற்றி வருகிறார், தற்போது வேட்டவலம் லயோலா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளராக உள்ளார். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ். வைத்யநாதன், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் 'சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றது' என்றும் இவர்கள் போதிக்கும் அறநெறி ஒரு மில்லியன் கேள்விக்குட்படுத்தியுள்ளது என்றும் கூறினார். இதை ஏராளமானோர் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திக் கொண்டனர். சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கிஷோர் கே சுவாமி கூறுகையில் , "மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை கடுமையான தாக்குதல் மற்றும் கிறிஸ்தவத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.
"மிக நீண்ட காலமாக, லயோலா ஜேசுட் சொசைட்டியில் உள்ள மூடி மறைக்கும் தன்மை கொண்ட அதிகார அமைப்பு அவற்றில் குற்றம் செய்பவர்களையும், அவர்களையும் பாதுகாக்கின்றன" என்று கிஷோர் கூறினார்.
கிஷோரின் கூற்றுப்படி, நிறுவனம் நிர்வாகத்துக்குள் வேறு யாரையும் ஈடுபட அனுமதிப்பதில்லை, ஆகவே அதற்கு வெளியே உள்ளீடு தேவை. குறிப்பாக, உள்ளூர் சட்ட விதிகளின் படி செயல்படும் ஒரு பகுதியாக கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றார் கிஷோர்.
“குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் அவர்களுக்குள்ளேயே தகவல் தெரிவித்துக் கொள்ளவேண்டும்!!!, ஆரம்பத்தில் இருந்தே இதுதான் பிரச்சினை. ஒரு கிருஸ்தவ சபையின் கார்டினல் இந்திய சட்டத்திற்கு மேலானவரா என்று சமீபத்தில் கேரள உயர்நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதி ஒருவர் கேள்வி எழுப்பியது./. இதை திருச்சபைகளில் நிலவும் ஒழுங்கீனங்களை வெளிச்சம் போட்டு காண்பித்ததாக ”கிஷோர் முடிவில் கூறினார்.
அத்தகைய மனிதர்களுக்கு எதிராக இயேசு எச்சரித்தார், “பரிசேயர்களின் ஈஸ்டிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள் - நான் அவர்களின் பாசாங்குத்தனத்தை கூறுகிறேன் . எதை மூடிமறைக்கிறோமோ அது வெளிப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ரகசியமும் தெரியப்படுத்தப்படும். எனவே, நீங்கள் இருட்டில் என்ன சொன்னாலும் பரந்த பகலில் கேட்கப்படும் என பைபிளில் இயேசு லூக்கா 12: 1-3 ” ல் கூறிய பொன் மொழிகளைக் கூறி கென்னடி முடித்தார்.
"எந்தவொரு பாதிரியாரும் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வதற்கான அதிகாரத்தையும் நம்பிக்கையையும் பயன்படுத்திக் கொள்வது தேவாலயத்திற்கு அவமானம் மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தல்" என்று சேவியோ ரோட்ரிக்ஸ் கூறினார்."
இந்த வெறுக்கத்தக்க துஷ்பிரயோக செயல்களின் விளைவாக, சாசனத்தின் முக்கிய கோட்பாடுகள் மற்றும் மிகத் தெளிவான மனித தேவை ஆகிய இரண்டையும் இயேசு சமூகம் இழந்துவிட்டதாகத் தெரிகிறது
""ஹெயில் மேரி திரைப்படம் மதகுருமார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும்போது திருச்சபை குறித்து காவல்துறையினரிடம் புகார் கூறி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதை என்பதை நினைவூட்டுவதாக இருக்கும் - மேலும் இயேசு சபைகளில் குற்றங்கள் நடை பெறுவதை அமைதியாக நின்று சமூகங்கள் வேடிக்கை பார்க்கும் போது என்ன நடக்கும்" என்பதை எடுத்துக் கூறும் என கூறி, சேவியோ முடித்தார்.