உபாகர்மம் செய்து கொண்ட புகைப்படத்துடன் கெத்தாக ரக்ஷாபந்தன் வாழ்த்து கூறிய மேடி
உபாகர்மம் செய்து கொண்ட புகைப்படத்துடன் கெத்தாக ரக்ஷாபந்தன் வாழ்த்து கூறிய மேடி
இந்திய திரையுலகில் மேடி என்று அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கொடி கட்டி பரக்கும் இவர் நடித்துள்ள அடுத்த திரைப்படம் ராக்கேட்ரி, தி நம்பி எபெக்ட். மூத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாரை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் இது.
யஜூர் வேத உபாகர்மம் (ஆவணி ஆவிட்டம்) இன்று நடைபெறுவதை முன்னிட்டு யஞ்யோபவீத தாரண நாமம் செய்து கொண்டு, ரக்ஷாபந்தனும் கொண்டாடியுள்ளார் நடிகர் மாதவன். அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மாதவனின் சகோதரி அனுப்பிய ராக்கியை அவரது மகன் கட்டி விட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆவணி ஆவிட்டம் அன்று பூணுல் மாற்றியவுடன் ராக்கி அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படத்தை மாதவனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.