மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை - முதல்வர் பட்னாவிஸ்!
மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை - முதல்வர் பட்னாவிஸ்!
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க உள்ளனர் என சரத் பவார் நேற்று இரவு தெரிவித்திருந்தார். ஆனால், ஒரே இரவில் நிலைமை மாறியிருக்கிறது.
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக, முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் பதவியேற்றுள்ளனர்.ஆட்சியில் சமபங்கு கோரியதால் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி முறிந்தது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது இதனால் கடந்த 10 நாட்களாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது.
மீண்டும் முதல்வராக பதவியேற்ற பின் பட்னாவிஸ் ‘செய்தியாளர்களை சந்தித்தார் ,மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான தீர்ப்பினை வழங்கியிருந்தனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு சிவசேனா பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தது. அதன் விளைவாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவுக்கு நிலையான அரசு தேவை, கிச்சடி அரசு தேவையில்லை’ என்றார்.