"மஹாராஷ்டிரா அரசியலை அநாகரீகம் என்பதா? அசிங்கம் என்பதா?" – மு.க.ஸ்டாலின்! "மூலப்பத்திரம் எங்கே?" – நெட்டிசன்கள்!

"மஹாராஷ்டிரா அரசியலை அநாகரீகம் என்பதா? அசிங்கம் என்பதா?" – மு.க.ஸ்டாலின்! "மூலப்பத்திரம் எங்கே?" – நெட்டிசன்கள்!

Update: 2019-11-23 09:45 GMT

மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவி ஏற்றுள்ளார். துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர், அஜித் பவார் பதிவேற்றியுள்ளார். இது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பாஜக எதிர்ப்பு கும்பல்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


துரோகத்தை துரோகத்தால் வீழ்த்திய தேவேந்திர பட்னாவிசுக்கு நாடு முழுவதும் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்றும், மகாராஷ்டிராவில் நடந்துள்ளது அரசியல் அருவருப்பு என்றும், இதை அநாகரிகம் என்பதா? அசிங்கம் என்பதா என்றும், தனது தந்தை கருணாநிதியின் வழியில் தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார்.


ஸ்டாலினின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும், “தந்தை முதல்வர், மகன்கள் துணை முதல்வர் & மத்திய அமைச்சர், மகள் ராஜ்ய சபை உறுப்பினர், பேரன் மத்திய அமைச்சர் என உலாவிய தி.மு.க ஜனநாயகம் பற்றி வாய் திறக்கலாமா?” என்று எட்வர்டு என்பவர் கேள்வி எழுப்பி உள்ளனர்.




https://twitter.com/Edward66378064/status/1198149093563912193


இதன்பெயர்தான் ஜனநாயகம் என்று உதயநிதிக்கு, திமுக இளைஞரணி செயலாளராக முடிசூட்டி அடுத்த வாரிசாக உருவாக்கிவருவதை முத்துகுமார் என்பவர் சுட்டிக்காட்டி கார்ட்டூனை பதிவேற்றம் செய்துள்ளார்.




https://twitter.com/MuthuRathina/status/1198149286589952007


“அதெல்லாம் இருக்கட்டும், முரசொலி மூல பத்திரம் எங்கே?” என்று பிரதீப், மகேஷ் குமார் போன்றவர்கள் கேள்வி கேட்டு ஸ்டாலினின் முகத்திரையை கிழித்து உள்ளனர்.




https://twitter.com/AskPradeepG/status/1198151152275083264




https://twitter.com/MaheshBJPTN/status/1198154158273990657


முரசொலி மூலப்பத்திரத்தை திசை திருப்ப, ஸ்டாலின் என்னவெல்லாம் நாடகமாடி வருகிறார் என்பதை வரிசைபடுத்தி உள்ளார் கிருபானந்தன்.




https://twitter.com/Kirubayuva/status/1198146930632609792


இதேபோல நெட்டிசன்கள், ஸ்டாலினை வச்சி செய்து வருகின்றனர்.


Similar News