அதிகரித்தது மாருதி சுசூகி கார் விற்பனை கடந்த மாதம் 4.5% அதிகரிப்பு.!
அதிகரித்தது மாருதி சுசூகி கார் விற்பனை கடந்த மாதம் 4.5% அதிகரிப்பு.!
நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் அக்டோபா் மாத விற்பனை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி நிறுவனம் அக்டோபரில் மொத்தம் 1,53,435 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 1,46,766 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4.5 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் விற்பனை 1,38,100 என்ற எண்ணிக்கையிலிருந்து 4.5 சதவீதம் அதிகரித்து 1,44,277-ஆக காணப்பட்டது
ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் உள்ளிட்ட மாடல்களின் விற்பனை 15.9 சதவீதம் அதிகரித்து 75,094-ஆக இருந்தது.
விட்டாரா ப்ரீஸ்ஸா எஸ்-கிராஸ், எா்டிகா உள்ளிட்ட காா்களின் விற்பனை 20,764 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 23,108-ஆனது.