உதயநிதிக்கு மேயர் பதவி; கனிமொழிக்கு கல்தா! - ஸ்டாலின் முடிவு; தி.மு.க தொண்டர்கள் குமுறல்!!
உதயநிதிக்கு மேயர் பதவி; கனிமொழிக்கு கல்தா! - ஸ்டாலின் முடிவு; தி.மு.க தொண்டர்கள் குமுறல்!!
“கழகமே குடும்பம்” என்று திமுகவை தொடங்கிய அண்ணாதுரை கூறினார். ஆனால் “குடும்பமே கழகம்” என்று திமுகவை மாற்றினார் கருணாநிதி. கருணாநிதியின் கொள்கைபடி, திமுகவை தன் குடும்ப கம்பெனியாக மாற்றி வருகிறார் ஸ்டாலின்.
திமுக உதயமான போது, அதற்கு தலைவராக யாரும் கிடையாது. பொதுச் செயலாளர் பதிவிதான் உயர்ந்த பதவியாக இருந்தது. 1969 - ஆம் ஆண்டு அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் தயவால் முதல்வர் பதவியை ஆக்கிரமித்துக்கொண்ட கருணாநிதியின் கையில் ஆட்சி இருந்தது.
இருந்தாலும் அப்போது பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்டுப்பாட்டில்தான் திமுக இருந்தது.
இதனால் முதல்வராக இருந்தாலும் கருணாநிதியால் கட்சியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எனவே கட்சிக்கும் எப்படியாவது தலைவராக வேண்டும் என்று நரித்தனமாக செயல்பட்டு அதுவரை யாரும் அமராத தலைவர் பதவியை அபகரித்துக்கொண்டார் அவர்.
அதன்பிறகு சாகும்வரை, திமுகவின் தலைவராக கருணாநிதியே இருந்தார். அந்த அளவிற்கு திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. எதிர்த்து கேள்வி கேட்ட எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். திமுகவில் வாரிசு அரசியல் உருவாகிறது. திமுக இளவரசராக ஸ்டாலின் முடிசூட்டப்படுவதை எதிர்த்த வைகோ, திமுகவில் இருந்து துரத்தியடிக்கப்பட்டார்.
அதற்குப்பின்னர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று திமுகவை தனது குடும்ப சொத்தாக மாற்றினார் கருணாநிதி.
இப்படித்தான் அண்ணாதுரையின் “கழகமே குடும்” என்ற திமுகவை, “குடும்பமே கழகம்” என்ற நிலைக்கு மாற்றிக்காட்டினார் கருணாநிதி.
இதுதான் திமுகவின் கடந்தகால ஜனநாயக கேலிக்கூத்து வரலாறு. இப்போது, தந்தையின் வழியில் தனயன் ஸ்டாலினும் திமுகவை தன் குடும்ப சொத்தாக மாற்றி வருகிறார்.