இந்திய பொருளாதாரம் குறித்து விஷம பரப்புரை - இதெல்லாம் தெரியாதா தமிழ் ஊடகங்களுக்கு.?

இந்திய பொருளாதாரம் குறித்து விஷம பரப்புரை - இதெல்லாம் தெரியாதா தமிழ் ஊடகங்களுக்கு.?

Update: 2019-11-11 07:22 GMT

இந்திய 2014 ஆம் ஆண்டில் 1.85 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருந்தது. இது ஐந்து ஆண்டுகளில் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம்.


நமது பொருளாதாரம் கூடும் போது வேலை வாய்ப்பு படிப்படியாக அதற்கான துறையில் கூடும். ஆனால் தற்போது பல ஊடகங்கள் ஒரு துறையை மட்டுமே மையப்படுத்தி இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தையும் எடை போட்டு வருகின்றன.


மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், லக்சம்பர்க் பெர்முடா போன்ற மக்கள்தொகை குறைந்த நாடுகளுக்கு GDP மட்டுமே போதுமானது. ஆனால், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தாண்டி, நுகர்வோர் செலவு, முதலீடு, அரசு செலவினம் மற்றும் நிகர ஏற்றுமதிகள், பணவீக்கம் அனைத்தும் உள்ளடக்க வேண்டும்.


வெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விவரம் பற்றி மட்டுமே பேசுவது மிகவும் தவறான பொருளாதார வாதமாகும். சர்வதேச நாணய நிதியம் உலக பொருளாதார பார்வை (ஏப்ரல் -2019) தகவலின்படி அமெரிக்காவின் GDP 2.33% , ரஷ்யாவின் GDP 1.61%, UKவின் GDP 1.17% ஆனால் பாகிஸ்தானின் GDP 2.9%, பங்காளதேஷின் GDP 7.29%.


அப்படியென்றால் பங்களாதேஷ் போன்ற நாடுகள் USA, சீனா, UK, ரஷ்யா, இந்தியா விட பொருளாதார சிறந்த நாடுகள் என சொன்னால் எப்படி இருக்கும்.? சரியாகச் சொல்வதானால், GDPயின் வளர்ச்சி புள்ளிவிவரம் ஒரு நாட்டின் மக்கள் தொகையை பொறுத்து முக்கியதுவம் பெறுகிறது.


Similar News