இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் !! பாகிஸ்தான்

இந்தியாவில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் !! பாகிஸ்தான்

Update: 2019-09-04 05:38 GMT

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இந்த விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெளிவாக கூறியது. ஆனால்,இதனை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுடனான வர்த்தக உறவை ஒரேயடியாக துண்டித்தது. இதனால் பாகிஸ்தானில் பல பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. வாணிபம் பாதித்ததால் அந்த நாட்டு வர்த்தகர்கள் கவலை அடைந்தனர்.


இந்த நிலையில், இந்தியாவுடன் மீண்டும் வணிகத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், உயிர்காக்கும் மருந்துப் பொருட்களை மட்டும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்துள்ளன.


கடந்த 16 மாதங்களில், இந்தியாவில் இருந்து 36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ள ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் விஷ முறிவு மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது .


Similar News