மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது!!

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது!!

Update: 2019-10-10 10:01 GMT

தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான “சைரா நரசிம்ம ரெட்டி” திரைப்படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிரடி வெற்றி பெற்றது. மொழிகடந்து இந்தியா முழுதும் உள்ள ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது.
இந்த நிலையில் சிரஞ்சீவி தன் ரசிகர்களுக்கு அடுத்த ஓரு அதிர்ச்சியை அளித்துள்ளார். அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் வேலை இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷத்தை தந்துள்ளது .





“சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் போர்வீரனாக கவர்ந்த சிரஞ்சீவி தற்போது அடுத்த படத்தில் மாடர்ன் மாஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இப்படத்தினை இயக்குகிறார்.
இன்று படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படத்திற்கு பூஜை போடப்பட்டது.
மிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்திற்கு ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் மற்றும் திரு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு ஒருங்கிணைப்பு செய்கிறார்.





தற்போதைக்கு சிரு152 (chiru152) என்றழைக்கப்படும். இப்படத்தை Konidela Production Company உடன் Matinee Entertainments இணைந்து தயாரிக்கிறார்கள்.


Similar News