முன்னெச்சரிக்கை நடவடிக்கை - நாட்டின் பிறபகுதிகளில் இருந்து காஷ்மீரில் குவிக்கப்படும் துணை ராணுவப் படை.!
முன்னெச்சரிக்கை நடவடிக்கை - நாட்டின் பிறபகுதிகளில் இருந்து காஷ்மீரில் குவிக்கப்படும் துணை ராணுவப் படை.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அதனை குடியரசு தலைவர் அதை ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டு, தற்போது இருந்து இது நடைமுறைக்கு வரும் என உத்தரவிட்டு இருக்கிறார்.
உத்தரப்பிரதேசம், ஒடிசா, அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பிறபகுதிகளில் இருந்து காஷ்மீருக்குக் கூடுதலாக 8,000-த்துக்கும் மேற்பட்ட துணைராணுவப் படையினர் விமானம் மூலம் அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.