வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் செய்த சதி.? இந்திய இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் செய்த சதி.? இந்திய இராணுவத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பாகிஸ்தான் உளவாளிகளால் வாட்ஸ் அப் குழுக்களில் சேர்க்கப்படுவதை தவிர்க்க, பாதுகாப்பு செட்டிங்கை உடனடியாக மாற்றும்படி வீரர்களை இந்தியா ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ராணுவம் விடுத்துள்ள அறிவுறுத்தலில், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் வாட்ஸ் அப் எண், பாகிஸ்தான் உளவாளி என சந்தேகிக்கப்படும் நபரால் வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் அதிலிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆதலால் பாகிஸ்தான் உளவாளிகளால் வாட்ஸ் அப் குருப்பில் சேர்க்கப்படுவதை தவிர்க்க முன்பின் தெரியா தோரால் குருப்பில் சேர்க்கப் படுவதை தடுக்கும் வகையில், வாட்ஸ் அப் பாதுகாப்பு செட்டிங்கை மாற்றுமாறு ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.