நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர், ப.சிதம்பரத்தின் பினாமியா? - போலீஸ் விசாரணை!!
நாமக்கல்லில் தற்கொலை செய்து கொண்ட கோடீஸ்வரர், ப.சிதம்பரத்தின் பினாமியா? - போலீஸ் விசாரணை!!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்த செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த். திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளராக இருந்தார். ஆனந்தின் மனைவி கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
இவர் தனது வீட்டின் தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்கு அருகில் அமர்ந்து, இரட்டைக்குழல் நாட்டுத்துப்பாக்கியால் தொண்டையில் வைத்து, தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டாக்டர் ஆனந்த், பரமத்தில் வேலூரில் நர்சிங் ஹோம் வைத்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பே தனது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஆகஸ்ட் மாத ஊதியத்தை வழங்கியுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் இவருக்கு பல கோடி ரூபாய் சொத்து உள்ளது. அதனால் பணப்பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட டாக்டர் ஆனந்த், ப.சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு உறவினர் என்று தெரியவந்துள்ளது.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்துகொண்டுள்ளதால், ப.சிதம்பரத்தின் பல பினமிகளில் இவரும் ஒரு பினாமியாக இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.