அடிப்படை புரிதல் கூட இல்லையா..? காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே பகிரப்பட்ட போலி செய்தி.!
அடிப்படை புரிதல் கூட இல்லையா..? காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே பகிரப்பட்ட போலி செய்தி.!
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஒவைஷ். டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆக.26-ந் தேதி வழக்கம் போல பணி முடித்து இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, லல்லன் மற்றும் அயூப் ஆகிய இரு விற்பனையாளர்களுடன் ‘மொபைல் ஹெட் போன்’ அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரண்டு விற்பனையாளர்களும் முகமது ஓவைஷை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், டெல்லி பிரதேச இளைஞர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் முகமது ஓவைஷ் தாக்கப்பட்டதன் காணொலி என குறிப்பிடப்பட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோவின் தொடக்கத்தில் "நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக ஒரு இளைஞன் உயிரை இழந்திருக்கிறான்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவின் உண்மை தன்மையை அறிய, அதனை ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வீடியோ உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. மீரட்டில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை அப்பகுதி மக்கள் அடித்துள்ளனர்.
அதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக டெல்லியில் ஆசிரியர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இரவில் அரங்கேறியது. ஆனால் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவோ பகலில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது போலி என தெரியவந்துள்ளது.