"மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரணக் குறிப்பு இல்லை" அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி! அத்தனையும் பொய்யா கோபால்ல்..? நெட்டிசன்கள் கலாய்!

"மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரணக் குறிப்பு இல்லை" அமைச்சர் பாண்டியராஜன் அதிரடி! அத்தனையும் பொய்யா கோபால்ல்..? நெட்டிசன்கள் கலாய்!

Update: 2019-11-08 04:30 GMT

இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, கடந்த 1971-ஆம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மிசா சட்டத்தை இயற்றியது. இந்த சட்டத்தின் படி, எந்த ஒரு தனிநபரையும் கால வரையறையின்றி சிறையில் அடைத்து வைக்கலாம், யாரையும் எந்த அதிகாரப்பூர்வ உத்தரவின்றி சோதனை செய்யலாம் என்ற ஷரத்துக்கள் இருந்தன. இதை நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திரா காந்தி அம்மையார் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.


தற்போது தமிழகத்தில் சர்ச்சையே நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கைது ஆனாரா இல்லையா என்பது தான். மிசா சட்டத்தில் தான் மு.க.ஸ்டாலின் கைது ஆனார் என தி.மு.க தம் கட்டினாலும், எதிர் தரப்பு அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவே இல்லை என சொல்லி வருகிறது.


இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது பேட்டியளித்து இருந்த தமிழக அமைச்சர் பாண்டியராஜன் "மிசா அமலுக்கு இருந்த காலகட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால், அடி வாங்கியதை அழுத்தமாக அவர் பதிவு செய்து வருகிறார். ஆனால், எதற்காக அடித்தார்கள்? ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடித்தார்கள் என்று கூறுவது தவறு. அவருடைய தவறான செயல்களுக்காக குறிப்பாக, பாலியல் சார்ந்த பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாட்டுக்காக அடித்திருக்கலாம் என்று அனைவரும் சொல்கிறார்கள்" என தெரிவித்து இருந்தார்.


திரு.பாண்டியராஜனின் இந்த கருத்துக்கு தி.மு.க கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. "தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத ஒரு அரசியல் வியாபாரி மாஃபா பண்டியராஜன்" என தி.மு.க எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அமைச்சர் பாண்டிராஜனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தி.மு.க தொண்டர்கள். தி.மு.க தலைவர் பாண்டியராஜனை மறப்போம், மன்னிப்போம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.




https://twitter.com/mkstalin/status/1192407638086021120?s=20


இவை அனைத்தும் நடந்துக் கொண்டு இருக்கவே அடுத்த பூகம்பம் வெடித்துள்ளது. "மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதற்கான காரணக் குறிப்பு இல்லை என்றும், மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என இரண்டு நாட்களில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் என்றும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.




https://twitter.com/AIADMKOfficial/status/1192652491554316288?s=20


மிசா சட்டத்தில் கைதானாரா இல்லையா மு.க.ஸ்டாலின்? 50 ஆண்டுக்கால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?


Similar News