நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.!

நடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.!

Update: 2019-10-01 06:50 GMT

வருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . அக்டோபர் 24 -ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்த நிலையில் தேர்தல் வேலைகளில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இரு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல்களும் நடைபெறுகிறது . இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. தலைமை வெளியிட்டது. இடைத்தேர்தல் நடைபெறும் உ.பியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பெயரும் அறிவிக்கப்பட்டது.


உ.பி யில் கோசி தொகுதியின் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட நடைபாதை காய்கறி வியாபாரின் மகன் விஜய் ராஜ்பாருக்கு சீட் கொடுத்துள்ளது. வாரிசு அரசியலில் இருக்கும் மற்ற காட்சிகள் இடையே தொண்டர்களுக்காக இருக்கும் கட்சி என்பதை பா.ஜ.க நிரூபித்துள்ளது.


வேட்பாளராக களமிறங்கும் காய்கறிகடைக்காரரின் மகன் விஜய் ராஜ்பார் இது குறித்து பேசுகையில், கட்சி எனக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கி உள்ளது .எனது தந்தை முனிஷ் புரா பகுதியில் உள்ள நடைபாதையில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பேன் என கூறினார்.


அவரின் தந்தை நந்த் லால் ராஜ்பார் இதை பற்றி கூறியபோது: நான் நடைபாதையில் காய்கறி விற்பனை செய்கிறேன். என் மகனின் உழைப்பையும் திறமையையும் பார்த்து பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது. அவர்களுக்கு என் நன்றி என கூறினார்.


Similar News