100 கோடி மக்களுக்கும் அதிகமானவர்களைச் சென்றடையும் இ-தந்த் சேவா - இந்திய மருத்துவ துறையில் ஒரு மைல்கல்!

100 கோடி மக்களுக்கும் அதிகமானவர்களைச் சென்றடையும் இ-தந்த் சேவா - இந்திய மருத்துவ துறையில் ஒரு மைல்கல்!

Update: 2019-10-07 14:57 GMT

இணையவழி பல்மருத்துவ தகவல் சேவையையும், செல்பேசி செயலியையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். வாய் சம்பந்தப்பட்ட சுகாதார தகவல் மற்றும் அறிவைப் பெறுவதற்கு தேசிய அளவில் முதலாவது டிஜிட்டல் மேடையாக இது இருக்கும். இணையம் மற்றும் செல்பேசி செயலி வடிவில், ஒரே சொடுக்கில் 100 கோடி மக்களுக்கும் அதிகமானவர்களைச் சென்றுசேரும் இ-தந்த் சேவா ஒரு முக்கியமான மைல் கல்லாகும். கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வாய்ச் சுகாதார சுவரொட்டிகளோடு பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான ப்ரைல் குறிப்பேட்டையும், ஒலிப்பதிவையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.


மக்களின் அறிவு மற்றும் தகவலுக்கான டிஜிட்டல் மேடைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் வழங்கப்பட்ட முக்கியத்துவத்தால் ஈர்க்கப்பட்டதன் விளைவே இத்தகைய குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளுக்குக் காரணம் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். “இணையம் மற்றும் செல்பேசி செயலி வடிவில், வாய் சம்பந்தப்பட்ட சுகாதார தகவல் மற்றும் அறிவைப் பெறுவதற்கு தேசிய அளவில் முதலாவது டிஜிட்டல் மேடையாக இ-தந்த் சேவா இருக்கும்” என்று டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறினார். வாழ்க்கை நல்ல தரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு வாய்ச் சுகாதாரம் இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.


மோசமான வாய்ச்சுகாதாரம், அனைத்து வகைகளிலும், மனிதவளர்ச்சியை, பாதிக்கிறது என்று அவர் கூறினார். பல்சொத்தை / பல்லில் குழி ஏற்படுதல் மற்றும் ஈறுகள் பாதிப்பு என்பவை இந்திய மக்களிடம் காணப்படும் அதிகபட்சமான பல்நோய்களாகும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பல்நோய் தொற்று, கடுமையான நோய்களுக்குக் காரணமாகிறது என்றார்.


வாய்ச்சுகாதாரத்தை அதிகபட்சம் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அது அருகில் உள்ள வாய்ச் சுகாதாரச் சேவை மையத்தை அணுகி, அது பற்றி தகவல்களை அறியச் செய்வதும், எய்ம்ஸ் மற்றும் பிறருடன் சேர்ந்த சுகாதார அமைச்சகத்தின் இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். அதிகாரபூர்வமான அறிவியல் ஆதாரங்களிலிருந்து திரட்டப்பட்ட வாய்ச்சுகாதாரத் தகவல், இணையத்திலும் செல்பேசி செயலியிலும் கிடைக்கும்


Similar News