தமிழக நலனில் மோடி 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது பா.ஜ.க ஆட்சியில் தொடங்கியது!!

தமிழக நலனில் மோடி 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது பா.ஜ.க ஆட்சியில் தொடங்கியது!!

Update: 2019-10-16 05:47 GMT

தெற்கு ரயில்வே சார்பில் , பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தொடங்கி வைத்தார்.


கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தில் அகல ரயில்பாதை பணி காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது கடந்த 2017 ஆம் ஆண்டு தற்காலிக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய திட்டத்தின் மூலம் இந்த ரயிலானது நிரந்தர பயணிகள் ரயிலாக இயக்கப்படுகிறது.
இதில் பழனிக்கு இயக்கப்படும் புதிய பயணியர் ரயில் மதியம் 1.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு பழனி சென்றடையும். இதேபோன்று பழனியில் இருந்து இயக்கப்படும் ரயில் 10.45க்கு புறப்பட்டு மதியம் 2.00 மணியளவில் கோவை வந்தடையும். இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மைவாடி ரோடு, புஷ்பத்தூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.




https://twitter.com/GMSRailway/status/1184036113301856258?s=19



பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் காலை 7.30மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கு கோவை வந்தடையும். இதேபோன்று கோவையில் 5.40 மணிக்கு புறப்படும் ரயில், போத்தனூர் கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் நின்று இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். இந்த ரயில் சேவைகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
 


கோவையில் நடைபெற்ற விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ரயில்களை கொடியசைத்து துவக்கிவைத்தனர்.




https://twitter.com/dpradhanbjp/status/1184050151653904385?s=19

Similar News