இஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி - கதறும் மலேசிய பிரதமர்.!
இஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி - கதறும் மலேசிய பிரதமர்.!
இந்தியாவில் இருந்து தப்பி சென்று மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாம் மத போதகர் ஜாகீர் நாயக் மலேசிய நாட்டுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வங்காளதேசத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய ஜாகீர் நாயக்கை விசாரணை செய்ய இந்திய அரசு சம்மன் அனுப்பிய நிலையில், தப்பி மலேசியாவில் சென்று தஞ்சம் புகுந்தார். அங்கும் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தினால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவிலும் அவர் பேச தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஜாகீர் நாயக் குறித்து கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் பிரதமர் மஹதிர் முஹம்மது "ஜாகிர் நாயக் இந்த நாட்டில் பிறந்த குடிமகன் இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் அவருக்கு தவறுதலாக குடியுரிமை அளிக்கப்பட்டது. இப்படி குடியுரிமை பெற்றவர்கள் இந்த நாட்டின் ஆட்சிமுறை மற்றும் அரசியல் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனை மீறி அவர் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் ரஷியாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தபோது ஜாகிர் நாயக்கை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைக்கவில்லை. அவரை ஏற்றுக்கொள்ள நிறைய நாடுகள் தயாராக இல்லை.தற்போது புர்ட்டஜெயா நகரில் வாழும் அவரை எங்கே அனுப்புவது? என்று ஆலோசித்து வருகிறோம். ஆனால், தற்போதைய சூழலில் ஜாகிர் நாயக்கை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை’ என தெரிவித்துள்ளார்.