பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட உள்ள பிரதமர் மோடி! #Diwali2019

பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட உள்ள பிரதமர் மோடி! #Diwali2019

Update: 2019-10-27 05:21 GMT

இந்திய பாகிஸ்தான் எல்லையில்(லைன் ஆஃப் கண்ட்ரோல்) ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாட பிரதமர் திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார். கடந்த ஆண்டுகளிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறார்.


நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.


இந்த ஆண்டும் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடும் வீரர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.


Similar News