காஷ்மீரில் தொகுதிகள் மறு சீரமைப்பு! தேர்தல் கமிஷன் பணியை தொடங்கியது !!
காஷ்மீரில் தொகுதிகள் மறு சீரமைப்பு! தேர்தல் கமிஷன் பணியை தொடங்கியது !!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 1939-ஆம் ஆண்டு சட்டசபை கொண்டுவரப்பட்டது. முதல்வராக ஷேக் அப்துல்லா இருந்தபோது ஜம்மு பகுதியில் 30 தொகுதிகளும், காஷ்மீர் பகுதிக்கு 43 தொகுதிகளும், லடாக் பகுதியில் இரண்டு என 75 தொகுதிகள் இருந்தன.
தற்போது ஜம்மு பகுதியில் 37 தொகுதிகளும், காஷ்மீர் பகுதியில் 46 தொகுதிகளும், லடாக் பகுதியில் 4 தொகுதிகள் என 87 தொகுதிகள் உள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது ஒரு சிறிய பகுதிதானே தவிர, மொத்த மாநிலமும் அல்ல. 22 மாவட்டங்களைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற பகுதி மூன்றரை மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது.
87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில், வெறும் மூன்றரை மாவட்டங்கள் மட்டுமே உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 46 உறுப்பினர்கள் இருந்தார்கள். இது கேலி கூத்தான ஒன்று.
இந்த நிலையில், 2002-ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370-ஐ பயன்படுத்தி அப்போதைய முதல்வர் பரூக் அப்துல்லா, மாநில அரசமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதன்படி 2026-ஆம் ஆண்டுவரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதத் தொகுதி சீரமைப்பும் செய்ய முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது அது குப்பையில் வீசப்பட்டு விட்டது.
இதனால், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சட்டசபை தொகுதி மறு சீரமைப்பு செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணியை தொடங்கும் விதமாக தலைமை தேர்தல் கமிஷன், சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டியது.
இதில் ஜஷ்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தொகுதிகளை எப்படி வரையறுத்து, மறு சீரமைப்பது, மொத்தம் எத்தனை சட்டசபை தொகுதிகளாக பிரிப்பது போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு பகுதியிலிருந்து எஸ்.சி மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தனி தொகுதிகள் உருவாக்கவும் பரிசீலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.